Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 123:15:32
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • பிரதமரின் Marrickville தேர்தல் அலுவலகம் மூடப்பட்டது- காரணம் என்ன?

    16/09/2025 Duración: 02min

    30 ஆண்டுகளுக்கும் மேலாக சிட்னியின் உள்-மேற்கில் இயங்கிவந்த பிரதமர் Anthony Albaneseயின் தேர்தல் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • புதிதாக இரண்டு விடுமுறை நாட்களைப் பெறவுள்ள ஆஸ்திரேலிய மாநிலம்!

    16/09/2025 Duración: 02min

    மேற்கு ஆஸ்திரேலியர்களுக்கு புதிதாக இரண்டு விடுமுறை நாட்கள் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இன்றைய செய்திகள்: 16 செப்டம்பர் 2025 செவ்வாய்க்கிழமை

    16/09/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 16/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • உபயோகித்த துணிகளை சேகரித்து உலக சாதனை!

    15/09/2025 Duración: 10min

    துபாயில் பயன்படுத்திய துணிகளை சேகரித்து உலக சாதனை நிகழ்த்திய பணியில் தமிழ் நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது. துபாயில் அமீரக செம்பிறைச் சங்கம், சோப்புத்தூள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அமீரகம் முழுவதும் உபயோகித்த துணிகளை சேகரித்து அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கும் பணியினை மேற்கொண்டது. இந்த பணியில் துபாயில் செயல்பட்டு வரும் Talent Zone இசை மற்றும் நடன மையம் பங்கேற்றுள்ளது. இது குறித்து இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த Sanyo Daphneயுடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் செல்வி.

  • ஆஸ்திரேலிய பாதுகாப்பு விசா விண்ணப்ப மோசடி: 7 குடிவரவு முகவர்கள் நாடுகடத்தல்

    15/09/2025 Duración: 03min

    ஆஸ்திரேலியாவில் மோசடியில் ஈடுபட்ட குடிவரவு முகவர்கள் 7 பேர் நாடுகடத்தப்படுவதாக எல்லைப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • How S Shakthidharan gathers his world in a single breath - ஒரே மூச்சில் தனது உலகை ஒன்று சேர்த்த எஸ். சக்திதரனின் கதை

    15/09/2025 Duración: 15min

    Writer and playwright S. Sakthitharan’s newly published book Gather Up Your World in One Long Breath has already provoked thoughtful reflection among readers. In this interview with Kulasegaram Sanchayan, he shares his insights into the book’s origins, the stories it weaves, and the wider social contexts they explore. - எழுத்தாளர் மற்றும் நாடகாசிரியர் எஸ். சக்திதரன் சமீபத்தில் வெளியிட்டுள்ள (ஒரு நீண்ட மூச்சில் உங்கள் உலகத்தை ஒன்று திரட்டுங்கள் என்று பொருள்படும்) ‘Gather up your world in one long breath’ என்ற தலைப்பிலான புத்தகம் வாசகர்களிடையே ஆழ்ந்த சிந்தனைகளைத் தூண்டியுள்ளது. இந்த புத்தகத்தின் தோற்றம், அதில் சொல்லப்படும் கதைகள், மற்றும் அவற்றின் பரந்த சமூகப் பின்னணிகள் குறித்து அவர் பகிர்ந்த சிந்தனைகளைக் கேட்கும் வாய்ப்பை உங்களுக்கு இந்த நேர்காணல் வழங்குகிறது. தமிழ் மொழியை சரளமாகப் பேசத் தெரியாத சக்திதரனின் பதில்களின் சுருக்கத்தையும் தமிழில் தருகிறார் இந்த நேர்காணலை செய்துள்ள குலசேகரம் சஞ்சயன்.

  • இன்றைய செய்திகள்: 15 செப்டம்பர் 2025 திங்கட்கிழமை

    15/09/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 15/09/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • செய்தியின் பின்னணி : ஆஸ்திரேலியாவில் வார இறுதியில் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள்!

    15/09/2025 Duración: 07min

    வார இறுதியில் நாட்டின் அனைத்து தலைநகரங்கள் மற்றும் சில பிராந்திய பகுதிகளில், பல்வேறு கருத்துக்களை முன்வைக்கும் இரு மாறுபட்ட குழுக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    14/09/2025 Duración: 09min

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கும் எதிர்க்கட்சிகள்; 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50' - தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா; திருச்சியில் பிரச்சார பயணத்தை தொடங்கிய த.வெ.க. தலைவர் விஜய் - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு - தமிழக அரசியலில் அதிர்வு அலைகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • ஆஸ்திரேலியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற Papua New Guineaக்கு நாளை வயது 50!

    14/09/2025 Duración: 13min

    ஆஸ்திரேலியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற Papua New Guinea நாடு தனது 50ஆவது சுதந்திர தினத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16 September 2025) கொண்டாடுகிறது. அந்த நாடு எப்படி சுதந்திரம் பெற்றது, அது இன்று எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • இந்த வார செய்திகள்: ஆஸ்திரேலியா & உலகம்

    13/09/2025 Duración: 05min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (7 – 13 செப்டம்பர் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 13 செப்டம்பர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • ஆஸ்திரேலியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு காரணமாகும் முக்கிய உயிரினம் எது

    12/09/2025 Duración: 02min

    ஆஸ்திரேலியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு காரணமாகும் உயிரினங்கள் எவை என்ற புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியர்கள் எந்த brand-ஐ அதிகம் நம்புகின்றனர்?

    12/09/2025 Duración: 02min

    ஆஸ்திரேலியர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்ட பெரிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Roy Morgan தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • NSW மாநிலத்தில் தற்கொலை தடுப்பு புதிய சட்டங்கள்!

    12/09/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 12/09/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.

  • நேபாள அரசியல் நெருக்கடி: அடுத்தது என்ன?

    12/09/2025 Duración: 08min

    நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடைகளை எதிர்த்து ஆயிரக்கணக்கான் இளைஞர் யுவதிகள் வீதியில் இறங்கி போராட்டம் ஒன்றை கடந்த திங்களன்று ஆரம்பித்தார்கள். இதன் பின்னணியை எடுத்துவருகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • செய்தியின் பின்னணி: மில்லியன் டாலர் பரிசு- Dezi Freeman யாரின் கையில் சிக்கப் போகிறார்?

    12/09/2025 Duración: 08min

    விக்டோரியா மாநிலத்தில் இரண்டு காவல்துறையினர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் Dezi Freeman என்ற குற்றச்சாட்டுக்குள்ளான நபரை கைது செய்ய விக்டோரியா காவல்துறையினர் ஒரு மில்லியன் டாலர் பரிசு அறிவித்துள்ளனர். இச் செய்தியின் பின்னணியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்

    11/09/2025 Duración: 08min

    முன்னாள் அதிபர்களுக்கு அரசு வழங்கிய வரப்பிரசாதங்களை நீக்கும் சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்; இவ்வருட இறுதிக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு

    11/09/2025 Duración: 07min

    நேபாளத்தில் Gen Z இளைஞர்களின் போராட்டமும் ஆட்சி கவிழ்ப்பும்; காசா மீதான போரை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்; கத்தாருக்குள் இஸ்ரேல் தாக்குதல்; டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் சுட்டுக் கொலை; கொரிய நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்யத் தயங்கும்-தென் கொரிய அதிபர்; அமெரிக்காவின் வர்த்தக அழுத்தம் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • நேபாளத்தில் என்ன நடக்கிறது? அங்குள்ள தமிழ் மாணவி தரும் தகவல்

    11/09/2025 Duración: 09min

    நேபாளத்தில் சமூக ஊடக தடைக்கு எதிராக தொடங்கிய இளம் தலைமுறையினரின் போராட்டம் அந்நாட்டு அரசையே ஆட்டம் காண வைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை நேபாளத் தலைநகர் காத்மண்டுவிலிருந்து பகிர்ந்துகொள்கிறார் வைஷ்ணவி. அவரோடு உரையாடுகிறார் றைசல்

  • நம்மவர் நம்மோடு: “பாப் சக்கரவர்த்தி” A.E. மனோகர்

    11/09/2025 Duración: 10min

    தமிழில் பாப் இசை மூலம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களைக் கவர்ந்தவர் மறைந்த பிரபல பாப் இசை பாடகர் A.E. மனோகர் அவர்கள். “பாப் சக்கரவர்த்தி” என்று அழைக்கப்படும் மனோகர் சிலோன் பாப் தமிழிசையையும், தமிழ், சிங்களம் கலந்த பாப் பாடல்களையும் உலகெங்கும் பரவச் செய்ததில் பெரும் பங்காற்றியவர். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவரோடு நாம் நடத்திய நேர்முகத்தின் மறு பதிவு. உரையாடியவர்: றைசெல்.

página 1 de 49