Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் சமூகத்தில் வாழ அனுமதித்த மூவர் நவ்ரூவிற்கு நாடு கடத்தல்
18/02/2025 Duración: 06minகாலவரையற்ற குடிவரவு தடுப்பு காவலை சட்ட விரோதமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து சமூகத்தில் விடுவிக்கப்பட்ட சுமார் 200-இற்கு அதிகமானவர்களில் மூவருக்கு நீண்டகால மீள்குடியேற்ற விசா வழங்க நவ்ரூ ஒப்புக்கொண்டதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் Tony Burke அறிவித்தார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டில் வட்டி வீதக் குறைப்பை ரிசர்வ் வங்கி அறிவித்தது!
18/02/2025 Duración: 02min2020 -ஆம் ஆண்டிற்கு பிறகு ஐந்து ஆண்டுகளில் RBA நாட்டின் முதல் வட்டி விகிதக் குறைப்பை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
NSW பொதுவெளியில் இனவெறிக் கருத்து கூறினால் சிறை - சட்டத்திருத்தம் முன்மொழிவு!
17/02/2025 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( செவ்வாய்க்கிழமை 18/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
'உலகம் புகழும்' கலைஞர், அவரை நாமும் புகழ்வோம் வாரீர்!
17/02/2025 Duración: 08minபுகழ்பெற்ற நட்டுவனார், குரு, கே. என். தண்டாயுதபாணி பிள்ளையின் காலத்தால் அழியாத மரபுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வான, 'உலகம் புகழும்,' அவருடைய நேசத்துக்குரிய மற்றும் அரிதாகவே காணப்பட்ட படைப்புகளை மேடைக்கு எடுத்து வருகிறது. சிதம்பரம் ஆர். சுரேஷ் மற்றும் ஷோபனா சுரேஷ் ஆகியோரின் பிரமிக்க வைக்கும் நடன அமைப்புடன் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஷோபனா சுரேஷ் மற்றும் சமர்ப்பனா நடன நிறுவனத்தின் மூத்த மாணவர்களின் வசீகரிக்கும் நடனமும் இடம்பெறுகின்றன.
-
NSW-இல் அதிவேகமாக வாகனம் ஓட்டி கமராவால் பிடிபட்ட முதல் 10 இடங்கள்!
17/02/2025 Duración: 02minNSW சாலைகளில் வேகமாக பயணிக்கும் வாகனத்தை படம்பிடிக்கும் கமராக்களால் படம் பிடிக்கப்பட்ட முதல் 10 வேகமாக பயணித்த வாகனங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
NSW நாடாளுமன்றத்தில் பொங்கல் விழா!
17/02/2025 Duración: 09minதமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் NSW மாநில நாடாளுமன்றத்தில் நடத்திய 9-வது ஆண்டு பொங்கல் விழா கடந்த வியாழக்கிழமை பிப்ரவரி 13-ஆம் தேதி நடைப்பெற்றது. SBS தமிழ் சார்பில் நாமும் அந்த நிகழ்வில் கலந்துக்கொண்டோம். NSW மாநில நாடாளுமன்றத்தில் நடந்த பொங்கல் விழா நிகழ்வின் தொகுப்பு. தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
17/02/2025 Duración: 09minஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சந்திப்பு, டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி, மத்திய பட்ஜெட் மீது திமுக கடுமையான விமர்சனம் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கடுமையான வார்த்தை மோதல் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
-
ஐஸ்கிரீம் உங்களுக்கு நல்லது என்று சில ஆய்வுகள் சொல்கின்றன. ஏன்?
17/02/2025 Duración: 07minசில ஆண்டுகளாக, ஐஸ்கிரீம் எமது உடலுக்கு நல்லது என்று பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகிறார்கள். இது குறித்து, சமூக ஊடகங்கள் மட்டுமின்றி பல பிரதான ஊடகங்களும் செய்திகள் வெளியிடுகின்றன.
-
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வீடு வாங்க தடை!
17/02/2025 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( திங்கட்கிழமை 17/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
கோடிக்கணக்கில் பெருகியிருக்கும் இந்த மீன்களை எப்படி அழிப்பது?
16/02/2025 Duración: 07minEuropean carp என்ற மீன் இனம் ஆஸ்திரேலியாவில் அழிக்கப்படவேண்டிய pest அல்லது தீங்குயிரி என்று சொல்லப்படுகிறது. இந்த வகை மீன்களை கட்டுப்படுத்துவது அல்லது கொல்வது என்பது சவாலாக மாறியுள்ளது. இந்த மீனின் பின்னணி கதையையும், சவாலையும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
15/02/2025 Duración: 04minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (9 – 15 பெப்ரவரி 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 15 பெப்ரவரி 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
Cultural burning: using fire to protect from fire and revive Country - தீ கொண்டு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தல்: பூர்வீகக் குடிமக்களின் வியத்தகு அறிவு
14/02/2025 Duración: 09minDid you know that Indigenous Australians have been using fire to care for the land for tens of thousands of years? Evidence show that cultural burning practices not only help reduces the intensity and frequency of wildfires but also plays a vital role in maintaining healthy ecosystems. Experts share insights on the latest evidence behind this ancient practice. - பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக, பூர்வீகக் குடிமக்கள் இந்த நிலத்தைப் பாதுகாத்து நிர்வகித்து வருகின்றனர் என்பதும் அதற்கு நெருப்பை ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? தீ கொண்டு காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தல் என்பது ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வீகக் குடியின மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் ஒரு நில மேலாண்மை நடை முறையாகும். உணவுத் திட்டமிடல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காட்டுத்தீ தடுப்பு ஆகியவற்றில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்பதை சான்றுகள் காட்டுகின்றன. இந்த பண்டைய நடைமுறையின் பின்னணியில் உள்ள சமீபத்திய சான்றுகள் குறித்த நுண்ணறிவுகளை நிபுணர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.
-
தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மெல்பனில் மரணம் - மாமனார் விளக்கம்
14/02/2025 Duración: 06minஇலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு 2012 -ஆம் ஆண்டு புகலிடம் தேடி வந்த 42 வயதான புகலிடக்கோரிக்கையாளர் பிரதாப் குணசேகரம் சுமார் மூன்று ஆண்டுகள் கோமாவில் இருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்தார். அவரை பற்றியும் அவருக்கு என்ன நடந்தது என்பதை பற்றியும் உரையாடுகிறார் அவரின் மாமனார் செல்வரட்ணம் மாணிக்கம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
14/02/2025 Duración: 08minயாழ்.தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிராக மக்கள் போராட்டம்; ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் இதில் 59 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இலங்கை அரசு அறிவிப்பு; கடந்த ஞாயிறு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பல மணிநேரம் மின்தடை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
கல்விக் கடன் உள்ள மாணவர்கள் வீடு வாங்குவதை எளிதாக்கும் அரசு!
14/02/2025 Duración: 06minHECS-HELP கல்விக் கடன்கள் உள்ள மாணவர்கள் தங்களின் முதலாவது வீடு வாங்கும்போது அவர்களுக்கு கடன் வழங்கும் வங்கிகள் மாணவர்களின் HECS-HELP கடனை பரிசீலிக்கும் விதிகளைத் தளர்த்துமாறு நிதிக் கட்டுப்பாட்டாளர்களிடம் பெடரல் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
தனது வான் வெளியை ஆஸ்திரேலியா 'ஊடுருவல்' செய்ததாக சீனா குற்றம் சாட்டியது
14/02/2025 Duración: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 14 பிப்ரவரி 2025 வெள்ளிக்கிழமை
-
வைரஸ் & தடுப்பூசி: நமது சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் தரும் விளக்கம்
13/02/2025 Duración: 10minகோடைகாலத்திலும் சரி, குளிர்காலத்திலும் சரி, காய்ச்சல், வைரஸ் பரவல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறுகிறது. இந்த நிலையில், நமது சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கின்றனர் சிட்னியில் குடும்ப மருத்துவர்களாக பணியாற்றும் டாக்டர் நளாயினி சுகிர்தன் & டாக்டர் பரன் சிதம்பரகுமார் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.
-
மோசடிகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?
13/02/2025 Duración: 12minநாட்டில் பல்வேறுவிதமான மோசடிகளில் சிக்கி ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இத்தகைய மோசடிகள் தொடர்பிலும் மோசடியால் பாதிக்கப்பட்டால் எங்கே முறையிடலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் விக்டோரிய காவல்துறையைச் சேர்ந்த Acting Sergeant ராஜேஷ் சாம்பமூர்த்தி. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஐந்து ஆண்டுகளில் வீடுகளின் மதிப்பு இரட்டிப்பான இடங்கள் எவை?
13/02/2025 Duración: 02minகடந்த ஐந்து ஆண்டுகளில் குயின்ஸ்லாந்து முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வீட்டு மதிப்புகள் இரட்டிப்பாகியுள்ளன. இந்த வளர்ச்சியின் அசாதாரண காலம் வரலாற்றில் பொறிக்கப்படும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.
-
இந்தக் காதலின் வயது எழுபது !
13/02/2025 Duración: 19minஉங்களுக்குத் தெரிந்தவர்களில் அதி கூடிய நாட்கள் ஒன்றாக வாழ்கிறவர்கள், அல்லது வாழ்ந்தவர்கள் யார் என்று கேட்டால் யாரைச் சொல்வீர்கள்?