Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 137:58:22
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • மலையக மக்கள் ஏமாற்றப்படுகிறார்களா?

    14/10/2025 Duración: 07min

    இலங்கையில் வேலைக்கேற்ற ஊதியம் இல்லை. இருப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இல்லாத நிலையில் மலையக மக்கள் வாழகின்றனர் என்றும், அவர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு அரசும் வழங்கும் தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் காலம் நகர்வதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • நடிகர் விஜயின் கரூர் கூட்ட துயரமும், விசாரணையும், கூட்டணியும்

    14/10/2025 Duración: 09min

    நடிகர் விஜயின் கரூர் கூட்ட துயரத்தைத் தொடர்ந்து விசாரணையும், கூடவே கூட்டணி பேச்சுக்களும் எழுந்துள்ளன. விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தை கூட்டணிக்கு அழைக்கிறது அதிமுக. இது பற்றிய விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • இன்றைய செய்திகள்: 14 அக்டோபர் 2025 செவ்வாய்க்கிழமை

    14/10/2025 Duración: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 14/10/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • அகதியிலிருந்து Cairns நகரில் பிறருக்கு வேலை தரும் நிலைக்கு உயர்ந்தது எப்படி?

    13/10/2025 Duración: 10min

    குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரின் - Cairns Central Shopping Centre யிலிருந்து SBS ஊடகத்தின் தெற்காசிய மொழி ஒலிபரப்புகளின் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை நேரடி ஒலிபரப்பாக ஒலித்தது. இந்த நிகழ்ச்சியில் நாம் சிவா அவர்களை சந்தித்தோம். அகதி பின்னணியிலிருந்து ஒரு சமூக சேவை நிறுவன உரிமையாளராக மாறிய கதையையும், Cairns, யாழ்ப்பாண நகரங்களின் சூழல்களையும் ஒப்பிடுகிறார். அவரை நேரடி ஒலிபரப்பின்போது சந்தித்து உரையாடியவர் றைசெல்.

  • மெல்பனில் இந்தியப் பெண் கொலை: பிந்திய தகவல்கள்

    13/10/2025 Duración: 02min

    மெல்பனில் தனது வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் இந்தியப்பின்னணி கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஏன் சிட்னியிலிருந்து Cairnsக்கு குடிபெயர்ந்தேன்? எப்படி Cairns சிறப்பானது?

    13/10/2025 Duración: 08min

    குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரின் - Cairns Central Shopping Centre யிலிருந்து SBS ஊடகத்தின் தெற்காசிய மொழி ஒலிபரப்புகளின் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை நேரடி ஒலிபரப்பாக ஒலித்தது. இந்த நிகழ்ச்சியில் நாம் பிரணவ் அவர்களை சந்தித்தோம். குடிவரவு வழக்கறிஞராக பணியாற்றும் அவர், Cairns எனும் பிராந்திய நகருக்கு குடிபெயர்ந்த கதையையும், Cairns நகரம் எப்படி வாழ்வதற்கு நல்ல தெரிவு என்றும் விளக்குகிறார். அவரை நேரடி ஒலிபரப்பின்போது சந்தித்து உரையாடியவர் றைசெல்.

  • Indigenous sport in Australia: Identity, culture and legacy - விளையாட்டுத்துறையில் அழியாத தடத்தைப் பதித்துள்ள பூர்வீகக்குடி பின்னணிகொண்ட வீரர்கள்!

    13/10/2025 Duración: 08min

    Indigenous Australian athletes have long inspired the nation, uniting communities and shaping our identity. Olympian Kyle Vander-Kuyp and Matildas goalkeeper Lydia Williams are two such Indigenous athletes that have shaped our national identity. Their stories show the power of sport to foster inclusion, equality, and pride for future generations. - ஒரு தேசத்தை ஊக்கப்படுத்த என்ன தேவை? பல ஆஸ்திரேலியர்களுக்கு, இதற்கான பதில் விளையாட்டு மைதானத்தில் கிடைக்கக்கூடும். கால்பந்து மைதானத்திலிருந்து தடகள அரங்கம் வரை, ஆஸ்திரேலிய பூர்வீகக்குடி பின்னணிகொண்ட விளையாட்டு வீரர்கள் இந்த நாட்டின் விளையாட்டு வரலாற்றை வடிவமைத்துள்ளனர்.பல கலாச்சாரங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையே இணைப்புகளை உருவாக்கி, ஆஸ்திரேலியாவின் தேசிய அடையாளத்தை வலுப்படுத்தியுள்ளனர்.

  • ஏன் தமிழ் திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் இல்லை?

    13/10/2025 Duración: 10min

    ‘இதயக்கனி’ விஜயன் அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட தமிழின் மூத்த பத்திரிகையாளர். அச்சு வடிவில் வெளிவரும் இதழ்கள் காணாமற்போகும் இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் பாய்ச்சலில், ‘இதயக்கனி’ எனும் இதழை, ஆசிரியர், வெளியீட்டாளர் என்று கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் விஜயன் அவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவரை SBS தமிழ் ஒலிபரப்புக்காக SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். பாகம் 2

  • ‘இதயக்கனி’ இதழின் பயணம் 25 ஆண்டுகளாக எப்படி சாத்தியமாகிறது?

    13/10/2025 Duración: 15min

    ‘இதயக்கனி’ விஜயன் அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட தமிழின் மூத்த பத்திரிகையாளர். அச்சு வடிவில் வெளிவரும் இதழ்கள் காணாமற்போகும் இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் பாய்ச்சலில், ‘இதயக்கனி’ எனும் இதழை, ஆசிரியர், வெளியீட்டாளர் என்று கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் விஜயன் அவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவரை SBS தமிழ் ஒலிபரப்புக்காக SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். பாகம் 1

  • செய்தியின் பின்னணி: நடைமுறைக்கு வரும் Baby Priya சட்டம் என்ன சொல்கிறது?

    13/10/2025 Duración: 08min

    குழந்தை பிறந்த பிறகு இறந்தாலும் அல்லது உயிரிழந்து குழந்தை பிறந்தாலும், பெற்றோருக்கு வழங்கப்படும் முதலாளி நிதியுதவியுடன் கூடிய பெற்றோர் விடுப்பு ரத்து செய்யப்படக்கூடாது என்ற நோக்கில் பெடரல் நாடாளுமன்றத்தில் Fair Work திருத்தச் சட்டம் (Baby Priya) சட்டமுன்வடிவு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • இன்றைய செய்திகள்: 13 அக்டோபர் 2025 திங்கட்கிழமை

    13/10/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 13/10/2025) செய்திகள். வாசித்தவர்: செல்வி.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    12/10/2025 Duración: 09min

    பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் - சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் களம்; கரூர் கூட்ட நெரிசல் விசாரணை மனுக்கள்: நாளை தீர்ப்பு வழங்குகிறது இந்திய உச்ச நீதிமன்றம்; பாஜக அண்ணாமலை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மோதல்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • Cairns எப்படி சிறந்த நகரம்? எனது இலக்கை அடையும் நகரமாக எப்படி மாறியது?

    12/10/2025 Duración: 08min

    குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரின் - Cairns Central Shopping Centre யிலிருந்து SBS ஊடகத்தின் தெற்காசிய மொழி ஒலிபரப்புகளின் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை நேரடி ஒலிபரப்பாக ஒலித்தது. இந்த நிகழ்ச்சியில் நாம் நடராஜன் அவர்களை சந்தித்தோம். Cairns நகரம் தனது இலக்கை அடையும் நகராக மாறிய கதையை விவரிக்கிறார். அவரை நேரடி ஒலிபரப்பின்போது சந்தித்து உரையாடியவர் றைசெல்.

  • ஏன் Cairns நகரை தேர்ந்தெடுத்தேன்? இந்த நகரம் உங்களுக்கும் பிடிக்கும்!

    12/10/2025 Duración: 10min

    குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரின் - Cairns Central Shopping Centre யிலிருந்து SBS ஊடகத்தின் தெற்காசிய மொழி ஒலிபரப்புகளின் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை நேரடி ஒலிபரப்பாக ஒலித்தது. இந்த நிகழ்ச்சியில் நாம் விஜி அவர்களை சந்தித்தோம். Real estate எனப்படும் வீடு விற்பனை முகவராக பணியாற்றும் அவர், Cairns எனும் பிராந்திய நகருக்கு குடிபெயர்ந்த அவரின் கதையையும், பிராந்திய நகரங்கள் எப்படி வாழ்வதற்கும், முதலீட்டுக்கும் நல்ல தெரிவு என்றும் விளக்குகிறார். அவரை நேரடி ஒலிபரப்பின்போது சந்தித்து உரையாடியவர் றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பின்னணியைப் பொறுத்து வீடு தொடர்பான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (5 அக்டோபர் – 11 அக்டோபர் 2025)

    11/10/2025 Duración: 06min

    ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (5 அக்டோபர் – 11 அக்டோபர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 4 அக்டோபர் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • ‘Here for Uber pickup?’: How Sikhs are responding to stereotypes - SBS Examines : சீக்கியர்கள் பாகுபாட்டை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்?

    10/10/2025 Duración: 07min

    Sikhism is a rapidly growing religion in Australia, but it's still poorly understood. How are community leaders responding to misinformation and discrimination? - சீக்கிய மதம் உலகின் ஐந்தாவது பெரிய மதம், மேலும் ஆஸ்திரேலியாவின் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், வேகமாக வளர்ந்து வரும் மதக் குழுவாக சீக்கிய மதம் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • மெக்குவரி தமிழ்ச் சங்கம் நடத்தும் 'தீபாவளி அலப்பறைகள்'

    10/10/2025 Duración: 07min

    மெக்குவரி தமிழ்ச் சங்கம் நடத்தும் 'தீபாவளி அலப்பறைகள்' என்ற கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் அக்டோபர் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள் மெக்குவரி தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த ஆதவன் ஸ்ரீனிவாசன், தேஜஸ்வினி ராஜீவ் மற்றும் வைஷ்ணவிப்ரியா சிவகுமார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • 'பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் நிரந்தர வதிவிடத்திற்கான நேரடிப் பாதையைத் தவறவிடுகின்றனர்'

    10/10/2025 Duración: 02min

    ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் தொடர்பிலான Jobs and Skills ஆஸ்திரேலியா அறிக்கை வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • செய்தியின் பின்னணி: திருடுவதை ஏன் பல ஆஸ்திரேலியர்கள் சரி என்கிறார்கள்?

    10/10/2025 Duración: 06min

    ஆஸ்திரேலியர்களில் சிலர் Retail Theft - “கடைகளில் நடக்கும் திருட்டு" சில நேரங்களில் நியாயமானது என்று கருதுவதாகவும் மற்றொரு பக்கம், பெரும்பாலானவர்கள் அதனை இன்னும் குற்றமாகவே காண்பதாகவும் ஆய்வு ஓன்று தெரிவித்துள்ளது. இது பற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இன்றைய செய்திகள்: 10 அக்டோபர் 2025 - வெள்ளிக்கிழமை

    10/10/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 10/10/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

página 1 de 55