Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
இசை ஊடான சேவைக்காக ஆஸ்திரேலிய அரசின் அதியுயர் விருது பெறும் தமிழர்கள்
09/06/2025 Duración: 12minஇசை ஊடாக சிறந்த சேவை ஆற்றியமைக்காக, மெல்பனைச் சேர்ந்த பிரபல வீணை இசைக்கலைஞர்களான ராம்நாத் ஐயர் மற்றும் கோபிநாத் ஐயர் சகோதரர்களுக்கு, ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia விருது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐயர் சகோதரர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சமூக சேவைகளுக்காக அதியுயர் விருது பெறும் தமிழர், ஹரன் இராமச்சந்திரன்
08/06/2025 Duración: 09minஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia Medal விருது, பல வருடங்களாக, பல அமைப்புகளுடன் இணைந்து சமூக சேவை ஆற்றி வரும் ஹரன் இராமச்சந்திரன் அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்தும், அவர் சந்தித்த சவால்கள், செய்த சாதனைகள் குறித்தும் ஹரன் இராமச்சந்திரன் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
06/06/2025 Duración: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (01 –07 ஜூன் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 7 ஜூன் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
ஒரு நிமிடத்திற்கு 95,000 டொலர்கள் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பில்லியனர்கள்!
06/06/2025 Duración: 03minஆஸ்திரேலியாவின் வீட்டுவசதி நெருக்கடி மோசமடைந்து வருவதால், ஒரு வீட்டை சொந்தமாக வைத்திருப்பது நடுத்தர வருமானம் உள்ள ஆஸ்திரேலியர்களுக்கு எட்டாததாகி வருகிறது. ஆனால் நாட்டிலுள்ள பில்லியனர்கள் இலட்சக்கணக்கான வீடுகளை வாங்கும் அளவுக்கு அவர்களின் ஒட்டுமொத்த செல்வம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
தட்டம்மை(Measles) தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி?
06/06/2025 Duración: 14minசின்னம்மை அல்லது தட்டம்மை எனப்படும் Measles நோய்ப்பரவல் தற்போது ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவருகிறது. இதற்கான காரணம் தொடர்பிலும் இதன் அறிகுறிகள் மற்றும் இதை எவ்வாறு தடுக்கலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார், சிட்னியில் குடும்பநல மருத்துவராகப் பணியாற்றும் நிஷானி நிமலன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
06/06/2025 Duración: 08minஇலங்கைக்கு வருகை தந்திருந்த ஆஸ்திரேலியா துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசியிருப்பது; யாழ். செம்மணி பகுதியிலிருந்து மேலும் பல மனித எச்சங்கள் மீட்பு; நுவரெலியாவின் ஹட்டன் நகரில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் LGBTQ சமூகத்தினரின் உரிமைகளை கோரி நடத்தப்பட்ட பேரணி உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
NSW அரசின் Workers Compensation சட்டத்திருத்தத்தை ஏன் தொழிற்சங்கங்கள் எதிர்க்கின்றன?
06/06/2025 Duración: 08minNSW மாநிலத்தில் வேலையிடங்களில் ஏற்படுகின்ற உளவியல் ரீதியான பாதிப்புகளை கையாளும் முறையை சீர்திருத்துவதற்காக உருவாக்கப்பட்ட Workers Compensation சட்டத்திருத்த சட்டமுன்வடிவு அம்மாநில நாடாளுமன்றத்தின் Legislative Council மேல் சபையில் நேற்று முன் வைக்கப்பட்டது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
காணாமல் போன பெண் வசித்த வீட்டிலிருந்தவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
06/06/2025 Duración: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 06 ஜூன் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
05/06/2025 Duración: 08minரஷ்யா- உக்ரைன் மோதல்; இஸ்ரேல்- காசா போர்; நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஹக்கா முழக்கம் காரணமாக 3 மௌரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்; அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்கு தடை; தென் சீனக் கடல் சர்ச்சையில் ஐரோப்பிய யூனியனின் தலையீடும் சீனாவின் கருத்தும்; நைஜீரியாவில் வெள்ளப் பாதிப்பில் 200 பேர் பலி உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
Why are migrant women missing out on vital medical tests? - SBS Examines : புலம்பெயர்ந்த பெண்கள் ஏன் முக்கியமான மருத்துவ பரிசோதனைகளைத் தவறவிடுகிறார்கள்?
05/06/2025 Duración: 08minMany people from CALD communities, especially women, are avoiding or delaying preventative cancer care. - பல்வேறு கலாச்சார பின்னணி, மொழி மற்றும் மரபுகளை சேர்ந்த மக்கள் குறிப்பாக பெண்கள் புற்றுநோய் வருவதற்கு முன் அதனை தடுக்கும் வகையில் முன்கூட்டியே கண்டறியும் பரிசோதனைகளை செய்யாமல் தவிர்க்கின்றனர்.
-
பிரிந்த பல பெற்றோர் குழந்தை ஆதரவு நிதி கொடுக்காமல் பல கோடி டாலர் பாக்கி வைத்துள்ளனர்
05/06/2025 Duración: 07minஆஸ்திரேலியாவில் இணைந்து வாழும் பெற்றோர் பிரியும் போது அவர்களின் குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளில் ஒரு பெற்றோர் மற்றவருக்கு பணம் செலுத்தும் ஒரு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இந்த குழந்தை ஆதரவு அமைப்பு Child Support System குறித்த Commonwealth Ombudsman விசாரணை அறிக்கையில் குழந்தை ஆதரவு அமைப்பில் நிதி முறைகேடு இடம்பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
தென்னிந்தியாவின் ஆன்மாவை தத்துவரூபமாக வரையும் ஓவியர் இளையராஜா
05/06/2025 Duración: 12minஓவியர் இளையராஜா என்ற பெயரை நீங்கள் கேள்விப்படாமல் இருக்கலாம். அவர் வரைந்த தத்துவரூபமான திராவிடப் பெண்களின் ஓவியங்களை கண்டிப்பாக நீங்கள் பார்த்து இரசித்திருப்பீர்கள். அவை புகைப்படமா? இல்லை ஓவியமா என்று நண்பர்களுடன் வாதாடியும் இருப்பீர்கள். ஓவியர் இளையராஜா அவர்கள் Covid-19 தொற்று காரணமாக, 2021ஆம் ஆண்டு ஜூன் ஆறாம் தேதி காலமானார். ஓவியர் இளையராஜாவுடன் 2014ஆம் ஆண்டு குலசேகரம் சஞ்சயன் நிகழ்த்திய நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
-
இரவில் நன்றாக தூங்குவதற்கும் நமது உணவுக்கும் தொடர்பு உள்ளதா?
05/06/2025 Duración: 06minஇரவில் நன்றாக தூங்குவதற்கும் நாம் சாப்பிடும் உணவுக்குமிருக்கும் தொடர்பு குறித்து விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு. சிவராமன் அவர்கள் வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
இரவில் நன்றாக தூங்குவதற்கும் நமது உணவுக்கும் தொடர்பு உள்ளதா?
05/06/2025 Duración: 06minஇரவில் நன்றாக தூங்குவதற்கும் நாம் சாப்பிடும் உணவுக்குமிருக்கும் தொடர்பு குறித்து விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வருகை தந்திருந்த மருத்துவர் கு. சிவராமன் அவர்கள் வழங்கிய நேர்முகத்தின் மறு ஒலிபரப்பு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
-
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது : வட்டி வீதம் மேலும் குறையுமா?
05/06/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 05/06/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
சிட்னியில் தொடரும் துப்பாக்கிச் சூடுகளும், படுகொலைகளும்: பின்னணி என்ன?
04/06/2025 Duración: 12minசிட்னி பெரு நகரில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நடந்துவரும் துப்பாக்கிச் சூடுகளும், படுகொலைகளும் பொதுமக்களை அச்சுறுத்திவரும் நிலையில், இதற்கான காரணத்தையும், வரலாற்றுப் பின்னணியையும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் உலக தரவரிசையில் எந்த இடத்திலுள்ளன?
04/06/2025 Duración: 03minபல்கலைக்கழகங்கள் தொடர்பில் புதிதாக வெளியாகியுள்ள உலகளாவிய ரீதியிலான தரப்படுத்தலின்படி முதல் 100 இடங்களுக்குள் நான்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழங்கள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
How does media work in Australia? - ஆஸ்திரேலியாவில் ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?
04/06/2025 Duración: 12minA free, independent and diverse press is a fundamental pillar of democracy. Australia has two taxpayer-funded networks that serve the public interest (ABC and SBS), plus a variety of commercial and community media outlets. Although publicly funded media receives money from the government, it is unlike the state-sponsored outlets found overseas. - ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு என்ன என்பது தொடர்பிலும், ஆஸ்திரேலியாவில் வர்த்தக ரீதியிலான ஊடகமும் அரச நிதியுதவியுடன் இயங்கும் ஊடகமும் எவ்வாறு வேறுபடுகிறது என்பது தொடர்பிலும், Claudianna Blanco ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஏன் அதிகமான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியா வருகின்றனர்? ஏன் பல இந்திய பல்கலைக்கழகங்கள் இங்கு ஏற்கப்படுவதில்லை?
04/06/2025 Duración: 17minஇந்தியாவின் உளவியல் துறை (Psychology), ஆற்றுப்படுத்தும் கலை (Counselling), மற்றும் இந்தியக் கல்வி முறை பற்றி உரையாடுகிறார் பேராசிரியர் பஞ்ச். இராமலிங்கம் அவர்கள். அவர் இந்தியாவின் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள UGC–Malaviya Mission Teacher Training Centreயின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். கல்வி மற்றும் ஆராய்ச்சி பணியில் 28 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்க அவர் உளவியல் துறையில் முனைவர் பட்டம் உட்பட பல பட்டங்களை பெற்றவர். உளவியலில் முன்னணி நிபுணராக, 110க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் பேராசிரியர் பஞ்ச். இராமலிங்கம் அவர்கள் கலைமாமணி, Cal Catterall Award உள்ளிட்ட பல சர்வதேச, தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டுமா?
04/06/2025 Duración: 05minஆஸ்திரேலியா தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கூற்றை பிரதமர் Anthony Albanese நிராகரித்துள்ளார். இச்செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.