Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 75:10:43
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • NSW-இல் Japanese encephalitis வைரஸ் தொற்றினால் மேலும் ஒரு நபர் பலி

    14/03/2025 Duración: 02min

    NSW மாநிலத்தில் கடந்த பெப்ரவரி மாதம் கொசுக்களினால் பரவும் Japanese encephalitis வைரஸினால் ஒருவர் இறந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு மற்றுமொருவர் Japanese encephalitis வைரஸினால் இறந்துள்ளார். இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • ஒரு நாளை எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? – சித்தா மருத்துவர் பதில்

    14/03/2025 Duración: 15min

    Dr.Y.R.மானக்சா M.D. (சித்தா) அவர்கள் தமிழக அரசின் சித்த மருத்துவ துறையின் கீழ் பாளையங்கோட்டையில் இயங்கும் அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிறந்த சித்த மருத்துவ நிபுணர் மட்டுமல்லாது சித்த மருத்துவ நூல் எழுத்தாளர் மற்றும் பேச்சாளரும் ஆவார். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவர், நமது SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து உரையாடினார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    14/03/2025 Duración: 08min

    உள்ளூராட்சி அமைப்புக்களுக்கான தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தும் பணியில் தமிழ் கட்சிகள் தீவிரம்; வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை; அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமை .இலங்கை முழுவதும் வைத்தியர்கள் ஒரு நாள் பணி புறக்கணிப்பு போராட்டம். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுகளுடன் உடன்படும் ரஷ்ய அதிபர் மேலதிக விவரங்களை கோருகிறார்

    13/03/2025 Duración: 05min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 14 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • மின்சார விலை சில மாநிலங்களில் ஏன் ஜூலை 1 முதல் உயர்கிறது?

    13/03/2025 Duración: 06min

    எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் 2025-26 -ஆம் ஆண்டிற்கான safety net 'பாதுகாப்பு நிகர' விலைகளின் வரைவை வெளியிட்டுள்ள நிலையில் ஜூலை 1 முதல் எரிசக்தி விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • அமெரிக்காவின் 25 சத வரிவிதிப்பும், ஆஸ்திரேலியாவில் அது ஏற்படுத்தப்போகும் தாக்கமும்!

    13/03/2025 Duración: 08min

    ஆஸ்திரேலிய அலுமினியம்/எஃகு மீது அமெரிக்கா 25% சதவீதம் வரி விதித்திருப்பதன பின்னணி என்ன, அதனால் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • இந்த வார இந்தியா & தமிழ்நாட்டின் முக்கிய செய்திகள்

    13/03/2025 Duración: 09min

    இந்தியாவில் தொடரும் மும்மொழி கொள்கை சர்ச்சை- தமிழ்நாடு முதல் நாடாளுமன்றம் வரை; ஹோலி- நமாஸ் பற்றிய பாஜகவினரின் சர்ச்சை பேச்சுகள்; தெலுங்கானா ஆணவப்படுகொலை குற்றவாளிக்கு தூக்கு; உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை கடைப்பிடிக்க கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்; ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோவுடன் கைக்கோர்த்து ஸ்டார்லிங் சேவை உள்ளிட்ட பல செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • Right To Disconnect சட்டம் ரத்து செய்யப்படும் – எதிர்க்கட்சி: பின்னணி என்ன?

    13/03/2025 Duración: 08min

    எதிர்வரும் பெடரல் தேர்தலில் வெற்றி பெற்றால், தற்போதைய லேபர் அரசில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு, தற்போது நடைமுறையிலிருக்கும் Right To Disconnect - தொழிலாளியை முதலாளி வேலை நேரம் முடிந்த பின்னர் தொடர்புகொள்ள உரிமை இல்லை எனும் சட்டம் ரத்து செய்யப்படும் என்று எதிர்க்கட்சியான Coalition மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

  • மத அல்லது ஆன்மீக நம்பிக்கை தான் நன்னெறிக்கு வழியா?

    13/03/2025 Duración: 14min

    டாக்டர் சுப்ரமணியம் அனந்தராம் Curtin பல்கலைக்கழகத்தில் சர்வதேச வர்த்தகத்தில் மூத்த விரிவுரையாளர். "மத அல்லது ஆன்மீக நம்பிக்கையுள்ளவர்கள் நல்ல நெறிமுறையுடன் பணிபுரிய வழிசெய்கிறதா?" என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கட்டுரை எமது கவனத்தை ஈர்த்துள்ளது. தனது பணி குறித்தும், இந்திய வேலைத்தளங்களில் நெறிமுறை குறித்தும் டாக்டர் சுப்ரமணியம் அனந்தராம், குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்.

  • கோவிட் பரவி ஐந்து ஆண்டுகள் - அடுத்த தொற்று பரவலை எதிர்கொள்ள நாம் தயாரா?

    13/03/2025 Duración: 06min

    கோவிட் ஒரு உலகளாவிய தொற்று பரவல் என்று அறிவித்து கடந்த மார்ச் 11-ஆம் தேதியோடு ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ளது. கோவிட் போன்று மற்றுமொரு தொற்று பரவல் தவிர்க்கமுடியாதது என்று கூறப்படும் நிலையில் அவ்வாறு வேறொரு தொற்று பரவல் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Abbie O'Brien எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • அமெரிக்க பொருட்களையல்ல, ஆஸ்திரேலிய பொருட்களையே வாங்குவோம் – பிரதமர் வேண்டுகோள்

    13/03/2025 Duración: 05min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 13 மார்ச் 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • நிரந்தர விசா விண்ணப்பத்தின் சிறிய பிழையினால் விசா நிராகரிக்கப்பட்ட பெர்த் பெண்!

    12/03/2025 Duración: 03min

    பெர்த் பெண் ஒருவரின் நிரந்தர விசா விண்ணப்பத்தில் இடம்பெற்ற ஒரு சிறிய பிழையினால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் 35 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • சிட்னி வருவோர் மறவாமல் செல்லும் Blue Mountains பின்னணி தெரியுமா?

    12/03/2025 Duración: 07min

    கோடிக்கணக்கான ஆண்டுகளாக ஆஸ்திரேலிய நிலவமைப்பில் உண்டான மாற்றங்களால் உருவானவை ப்ளூ மவுன்டன்ஸ். சுமார் பத்தாயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பில் பரந்து கிடக்கும் ப்ளூ மவுன்டன்ஸ் பகுதி 2000-ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றெனும் சிறப்பைப் பெற்றுள்ளது. “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் இந்த மலைத் தொடரின் சிறப்புகளை விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள்.

  • Pakiboy²: பார்க்கின்சன் நோயுடன் போராடும் ஒரு இளம் கலைஞரின் படைப்பு

    12/03/2025 Duración: 12min

    பார்க்கின்சன் நோய் என்ற நரம்பியல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், 2000 ஆம் ஆண்டு இலண்டனில் அவர் உருவாக்கிய நடனப் படைப்புகளின் ஆவணங்களையும், இருபது வருடங்கள் முதிர்ந்து விட்ட, தற்போதைய உடல் இயக்கத்தில் உருவான அவரது மேடை நடன நிகழ்ச்சியையும் உள்ளடக்கிய ஒரு அரங்க நிகழ்வை Pakiboy² என்ற தலைப்பில் உருவாக்கியுள்ளார் ஜீவா பார்த்திபன். அவரை நேர்காணல் செய்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாத பெண்களுக்கு ஏன் வேலை கிடைப்பது கடினம்?

    12/03/2025 Duración: 06min

    மொழி அடிப்படையிலான பாகுபாடு பெரும்பாலும் இனம் அல்லது மத அடிப்படையிலான பாகுபாட்டை விட குறைவாகவே பதிவாகிறது என்றும் ஆங்கிலம் தாய்மொழி அல்லாத பின்னணியைச் சேர்ந்த பெண்கள் ஆண்களை விடக் குறைவாகவே பணியில் அமர்த்தப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தருகிறார் செல்வி.

  • மெல்பன் மருத்துவர்களின் கொண்டாட்டம்

    12/03/2025 Duración: 03min

    IMDA என்ற மருத்துவர், பல் மருத்துவர் மற்றும் வைத்தியம் சார்ந்த துறையை சார்ந்தவர்களின் அமைப்பு மெல்பனில், மார்ச் 15ஆம் தேதி மாலை ஐந்து மணியிலிருந்து இரவு பத்து மணி வரை நடைபெறவுள்ளது. இது பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் வைத்தியர் அனில் போத்தாப்பு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • இன்று முதல் ஆஸ்திரேலிய அலுமினியம்/எஃகு மீது அமெரிக்கா 25% சதவீதம் வரி விதிக்கிறது!

    12/03/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 12/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • NSW-இல் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இந்திய பின்னணி கொண்டவருக்கு 40 ஆண்டு சிறை!

    11/03/2025 Duración: 02min

    NSW இந்திய சமூகத்தில் மிகவும் அறியப்பட்ட சமூக தலைவரான ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • அதிகமான பெண்களிடம் ஓய்வு காலத்தில் போதுமான பணம் இருக்காது - புதிய ஆய்வு

    10/03/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 11/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • Mortgage Brokers: Do you need one? Can you trust them with your private documents? - வீட்டுக்கடன்பெற Mortgage Broker தேவையா? நமது தகவலை அவர்கள் தவறாக பயன்படுத்துவார்களா?

    10/03/2025 Duración: 15min

    Jayaprakash Arumugam from Hardee Mortgage Solutions is a qualified mortgage broker based in Sydney, specializing in assisting first-time homebuyers, property investors, self-managed super funds, and clients seeking land and construction loans or refinancing. In this episode, he discusses the benefits of working with a mortgage broker, the importance of maintaining a good credit score, and addresses concerns about data privacy, including fears that some brokers may mishandle confidential documents. Produced by RaySel. ——————————————————————————————————————- The information shared in this program is for general purposes only and does not constitute professional advice. Listeners are encouraged to verify details independently and seek expert guidance where necessary. - Hardee Mortgage Solutions எனும் நிறுவனத்தைச் சார்ந்த ஜெயப்பிரகாஷ் ஆறுமுகம் அவர்கள் சிட்னியின் பிரபலமான Mortgage Brokerகளில் ஒருவர். முதல் முறையாக வீடு வாங்குபவர்கள், சொத்து முதலீட்டாளர்கள், சுயமாக நிர்வகிக்கப்படும் சூப்பர் நிதிகள் மற்றும் நிலம் மற

página 21 de 30