Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 97:45:51
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • SBS 50 ஆண்டுகள்: சிறப்பும் சவால்களும்

    11/06/2025 Duración: 11min

    SBS வானொலி 50 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள இவ்வேளையில், SBS வானொலியின் தமிழ் ஒலிபரப்பில் ஒலிபரப்பாளர்களாக, நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாக கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேல் கடமையாற்றி வருபவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு குலசேகரம் சஞ்சயன்.

  • தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி

    11/06/2025 Duración: 07min

    இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு பயணம்; கீழடி தொல்லியல் ஆய்வு சர்ச்சை; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்; தீவிரமடையும் மாவோயிஸ்ட் தேடுதல் நடவடிக்கை உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • குழந்தை பெறும் பெற்றோரின் விடுப்பு தொடர்பான சட்டத்தில் அரசு மாற்றம் கொண்டுவருகிறது

    11/06/2025 Duración: 06min

    Paid parental leave ஊதியத்துடனான பெற்றோர் விடுப்பு எடுத்துள்ள பெற்றோரின் குழந்தை பிறந்து பிறகு இறந்து போனால் அவரின் paid parental leave ரத்து செய்யப்படுகிறது. இதனை மாற்றுவதற்கான சட்டத்திருத்தம் செய்ய போவதாக லேபர் அரசு உறுதியளித்துள்ளது. இதன் குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • ஆஸ்திரேலியா, 2026 FIFA உலகக் கோப்பைக்குத் தகுதி

    10/06/2025 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 11/06/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இந்த ஆண்டு விரைவான சம்பள அதிகரிப்பைக் கண்ட தொழில்கள் எவை தெரியுமா?

    10/06/2025 Duración: 03min

    இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையிலான காலப்பகுதியில் விரைவான சம்பள வளர்ச்சியைக் கொண்டவையாக விளம்பரப்படுத்தப்பட்ட தொழில்களின் பட்டியலை SEEK நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • அமெரிக்காவில், போராட்டங்கள் நடத்துபவர்களைக் கட்டுப்படுத்த சிறப்பு கடற்படை வீரர்கள்

    10/06/2025 Duración: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 10 ஜூன் 2025 செவ்வாய்க்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • ஏன் நம்மவர்கள் இங்கு சைக்கிள் ஓட்டுகின்றனர்?

    09/06/2025 Duración: 09min

    ஜூன் 3-ஆம் தேதி உலக சைக்கிள் தினம் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் சைக்கிளின் முக்கியத்துவம் மற்றும் அதன் பலன்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தக் கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • அரசின் பொது சேவை பதக்கம் பெறும் பீனா சந்திரா

    09/06/2025 Duración: 06min

    The Public Service Medal எனப்படும் பொது சேவை பதக்கம் (PSM), இந் நாட்டில், அனைத்து மட்டங்களிலும் பணிபுரியும் பொது ஊழியர்களுக்கு, சிறந்த சேவைக்காக வழங்கப்படும் ஒரு விருது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை, ஆஸ்திரேலியாவின் கவர்னர்-ஜெனரல் அவர்களால் சுமார் நூறு பேருக்கு வழங்கப்படும் இந்த விருதைப் பெறும் பீனா சந்திரா அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். பீனா சந்திரா அவர்களால் தமிழில் சரளமாகப் பேச முடியாது என்பதால், இந்த நேர்காணல் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது.

  • டாஸ்மேனிய அரசியலின் கொந்தளிப்பான நிலை

    09/06/2025 Duración: 08min

    கடந்த சில வாரங்களாக, டாஸ்மேனிய மாநில அரசியல் ஒரு பதட்டமான நிலையில் காணப்படுகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்த செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • SBS ஒலிபரப்பு துவங்கி இன்று ஐம்பதாவது ஆண்டு!

    09/06/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 09/06/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    09/06/2025 Duración: 10min

    தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு ரூ.24 ஆயிரம் கோடியில் பாலம்: இந்தியாவின் திட்டத்திற்கு இலங்கை மறுப்பு; மதுரையில் நடைபெற இருக்கும் ஆன்மிக முருகன் மாநாடு - அரசியல் மாநாடு என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம்; அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு; தொகுதி மறுவரையறை விவகாரம் - திமுக எதிர்ப்பு - இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • இசை ஊடான சேவைக்காக ஆஸ்திரேலிய அரசின் அதியுயர் விருது பெறும் தமிழர்கள்

    09/06/2025 Duración: 12min

    இசை ஊடாக சிறந்த சேவை ஆற்றியமைக்காக, மெல்பனைச் சேர்ந்த பிரபல வீணை இசைக்கலைஞர்களான ராம்நாத் ஐயர் மற்றும் கோபிநாத் ஐயர் சகோதரர்களுக்கு, ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia விருது வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐயர் சகோதரர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • சமூக சேவைகளுக்காக அதியுயர் விருது பெறும் தமிழர், ஹரன் இராமச்சந்திரன்

    08/06/2025 Duración: 09min

    ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia Medal விருது, பல வருடங்களாக, பல அமைப்புகளுடன் இணைந்து சமூக சேவை ஆற்றி வரும் ஹரன் இராமச்சந்திரன் அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. அவரது பின்னணி குறித்தும், அவர் சந்தித்த சவால்கள், செய்த சாதனைகள் குறித்தும் ஹரன் இராமச்சந்திரன் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு

    06/06/2025 Duración: 05min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (01 –07 ஜூன் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 7 ஜூன் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • ஒரு நிமிடத்திற்கு 95,000 டொலர்கள் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பில்லியனர்கள்!

    06/06/2025 Duración: 03min

    ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதி நெருக்கடி மோசமடைந்து வருவதால், ஒரு வீட்டை சொந்தமாக வைத்திருப்பது நடுத்தர வருமானம் உள்ள ஆஸ்திரேலியர்களுக்கு எட்டாததாகி வருகிறது. ஆனால் நாட்டிலுள்ள பில்லியனர்கள் இலட்சக்கணக்கான வீடுகளை வாங்கும் அளவுக்கு அவர்களின் ஒட்டுமொத்த செல்வம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • தட்டம்மை(Measles) தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி?

    06/06/2025 Duración: 14min

    சின்னம்மை அல்லது தட்டம்மை எனப்படும் Measles நோய்ப்பரவல் தற்போது ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவருகிறது. இதற்கான காரணம் தொடர்பிலும் இதன் அறிகுறிகள் மற்றும் இதை எவ்வாறு தடுக்கலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார், சிட்னியில் குடும்பநல மருத்துவராகப் பணியாற்றும் நிஷானி நிமலன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    06/06/2025 Duración: 08min

    இலங்கைக்கு வருகை தந்திருந்த ஆஸ்திரேலியா துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசியிருப்பது; யாழ். செம்மணி பகுதியிலிருந்து மேலும் பல மனித எச்சங்கள் மீட்பு; நுவரெலியாவின் ஹட்டன் நகரில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் LGBTQ சமூகத்தினரின் உரிமைகளை கோரி நடத்தப்பட்ட பேரணி உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • NSW அரசின் Workers Compensation சட்டத்திருத்தத்தை ஏன் தொழிற்சங்கங்கள் எதிர்க்கின்றன?

    06/06/2025 Duración: 08min

    NSW மாநிலத்தில் வேலையிடங்களில் ஏற்படுகின்ற உளவியல் ரீதியான பாதிப்புகளை கையாளும் முறையை சீர்திருத்துவதற்காக உருவாக்கப்பட்ட Workers Compensation சட்டத்திருத்த சட்டமுன்வடிவு அம்மாநில நாடாளுமன்றத்தின் Legislative Council மேல் சபையில் நேற்று முன் வைக்கப்பட்டது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • காணாமல் போன பெண் வசித்த வீட்டிலிருந்தவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

    06/06/2025 Duración: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 06 ஜூன் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு

    05/06/2025 Duración: 08min

    ரஷ்யா- உக்ரைன் மோதல்; இஸ்ரேல்- காசா போர்; நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஹக்கா முழக்கம் காரணமாக 3 மௌரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்; அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்கு தடை; தென் சீனக் கடல் சர்ச்சையில் ஐரோப்பிய யூனியனின் தலையீடும் சீனாவின் கருத்தும்; நைஜீரியாவில் வெள்ளப் பாதிப்பில் 200 பேர் பலி உள்ளிட்ட உலகச் செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

página 11 de 39