Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
30/06/2025 Duración: 09minஅரசியலமைப்பின் முகவுரையில் மாற்றம் - விஸ்வரூபம் எடுத்த புது சர்ச்சை; தமிழகத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர்கள்; மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ - எடப்பாடி பழனிசாமியின் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
ஊட்டச்சத்து மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு வருகிறது - ஏன்?
30/06/2025 Duración: 08minVitamin B6 அதிக அளவில் உள்ள சில ஊட்டச்சத்து மாத்திரைகளை வாங்குவதில் கட்டுபாட்டை பரிந்துரைக்கும் ஒரு இடைக்கால அறிக்கையை Therapeutic Goods Administration (TGA) வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
'காலவரையற்ற தடுப்புக்காவல் தொடர்பிலான உயர்நீதிமன்றத் தீர்ப்பால் அரசு விரக்தியடைந்துள்ளது'
30/06/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 30/06/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
செக்ஸ் - கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்: பாலியல் தொற்றுகள்
29/06/2025 Duración: 15minடாக்டர் நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்” தொடரில் பாலியல் தொற்று நோய்கள் குறித்து அவர் விளக்குகிறார். தொடரின் ஆறாம் பாகம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து மருத்துவரின் அல்லது பாலியல் நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-
This slur was used to abuse Concetta's father. For her, it's a proud identity - ஆஸ்திரேலியாவில் குடியேறிய இத்தாலிய மற்றும் கிரேக்க சமூக மக்களின் சவால்களும் சாதனைகளும்!
29/06/2025 Duración: 08minThe term was used as an insult towards Greek and Italian migrants who arrived after the Second World War. But the generations that follow have reclaimed 'wog', redefining their cultural identity. - 'Wog' என்பது மத்தியதரைக் கடல் பகுதியைச் சேர்ந்த மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு இன அவதூறு சொல்லாகும். 'Wog' என்று முத்திரை குத்தப்பட்ட இத்தாலிய மற்றும் கிரேக்க சமூக மக்களில் சிலர் அதனை அவதூறாகக் கருதாமல் பெருமையுடன் தன்னை 'wog' என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
27/06/2025 Duración: 04minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (22 –28 ஜூன் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 28 ஜூன் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
உங்கள் துணையை ஆஸ்திரேலியா வரவழைப்பதற்கான விசா: நீங்கள் கவனிக்க வேண்டியவை
27/06/2025 Duración: 14minஆஸ்திரேலியாவுக்கான விசா தொடர்பிலும் இதற்கு விண்ணப்பிக்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் விளக்குகிறார் சிட்னியில் குடிவரவு முகவராகக் கடமையாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவில் நாளை (ஜூலை 1) வரும் மாற்றங்கள் என்ன?
27/06/2025 Duración: 11minஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் (July 1, 2025 – June 30, 2026) எனும் புதிய நிதியாண்டில் பல மாற்றங்கள் வர உள்ளன. இந்த மாற்றங்கள் என்ன என்று செய்தியின் பின்னணி நிகழ்ச்சி வழியாக விளக்குகிறார் றைசெல்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
27/06/2025 Duración: 08minயாழ்.செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி அணையா விளக்கு போராட்டம்; இலங்கை வந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வருகை; ஈரான் இஸ்ரேல் மோதல் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் கருத்துக்கள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
‘ஈரானை சீண்டினால், மீண்டும் அமெரிக்காவைத் தாக்குவோம்’ - Ayatollah Ali Khamenei
27/06/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 27/06/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
ஜூலை 1 முதல் புதிய சாலை விதிகள் – ஒரு தவறு $1600 வரை அபராதமாகலாம்
26/06/2025 Duración: 06min2025 ஜூலை 1ம் திகதி முதல், ஆஸ்திரேலியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் புதிய விதிமுறைகள் அறிமுகமாகின்றன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை வழங்குகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
26/06/2025 Duración: 07minஈரான் இஸ்ரேல் போர் நிறுத்தம்; காசா- இஸ்ரேல் போர்; நேட்டோ உச்சி மாநாடு; கென்யாவில் மீண்டும் இளைஞர்கள் போராட்டம்; காங்கோ ஜனநாயக குடியரசு- ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்; நைஜீரியவிலிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட சிற்பங்களை திருப்பி அளித்த நெதர்லாந்து; சீனாவில் வெள்ள பாதிப்பு உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
Centrelink கொடுப்பனவு மற்றும் வரி தொடர்பில் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் எவை?
26/06/2025 Duración: 04minஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு ஜூலை 1 முதல் – அதாவது புதிய நிதியாண்டில் பல மாற்றங்கள் வர உள்ளன. குறிப்பாக Centrelink கொடுப்பனவு மற்றும் வரி தொடர்பில் நடைமுறைக்கு வரவுள்ள மாற்றங்கள் குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
பெற்றோர் விடுப்பு தொடர்பில் நடைமுறைக்கு வரவுள்ள மாற்றங்கள் எவை?
26/06/2025 Duración: 03minஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு ஜூலை 1 முதல் – அதாவது புதிய நிதியாண்டில் பல மாற்றங்கள் வர உள்ளன. குறிப்பாக Paid Parental Leave மற்றும் Parental Leave தொடர்பில் நடைமுறைக்கு வரவுள்ள மாற்றங்கள் குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
ஜுலை 1 முதல் Superannuation-இல் நடைமுறைக்கு வரவுள்ள மாற்றம் என்ன?
26/06/2025 Duración: 02minஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு ஜூலை 1 முதல் – அதாவது புதிய நிதியாண்டில் பல மாற்றங்கள் வர உள்ளன. குறிப்பாக Superannuation எனப்படும் ஓய்வூதிய சேமிப்பு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பணியிட உரிமை தொடர்பில் நடைமுறைக்கு வரவுள்ள மாற்றங்கள் குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
எந்த சூப்பர்மார்க்கெட்டில் விலை குறைவு? சாய்ஸ் ஆய்வு முடிவு
26/06/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 26/06/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
-
அமெரிக்காவின் போர்களில் ஆஸ்திரேலிய Pine Gap உளவு நிலையத்தின் பங்கு என்ன?
25/06/2025 Duración: 10minஈரானின் அணு சக்தி ஆய்வு நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய bunker buster குண்டுத்தாக்குதலில் ஆஸ்திரேலியாவின் Alice Springs எனுமிடத்திற்கு அருகில் Pine Gap என்ற இடத்தில் இயங்கும் Joint Defence Facility Pine Gap எனப்படும் ஆஸ்திரேலிய - அமெரிக்க கூட்டு செய்மதித் தொடர்பு மற்றும் உளவு கண்காணிப்பு நிலையம் பயன்பட்டிருக்கலாம் என்ரு Greens கட்சி கூறுகிறது. இந்த பின்னணியில் Pine Gap நிலையம் பற்றிய தகவலை விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
ஈரான்-இஸ்ரேல் போர்நிறுத்தம்: அடுத்தது என்ன?
25/06/2025 Duración: 09minஈரான்- இஸ்ரேல் இடையே ஒரு பலவீனமான போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்த வார தமிழகம்/இந்தியா செய்திகளின் பின்னணி
25/06/2025 Duración: 08minதமிழ்நாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு குறித்த சர்ச்சை; போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது; ராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்; ஒடிசாவில் பசு பாதுகாப்பு பெயரில் தலித்துகள் மீது தாக்குதல்; ஈரான், இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் உள்ளிட்ட செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
வீடு வாங்குகின்றவர்கள் வீடு வாங்கித்தர Agentஐ வைத்துக்கொள்ளலாமா?
25/06/2025 Duración: 16minவீடு வாங்குகின்றவர்களும் தங்களுக்கு ஒரு Agentஐ வைத்துக்கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது. வீடு வாங்குகின்றவர்கள் தங்களுக்கு வீடு வாங்கித் தருவதற்கு ஒருவரை ஒப்பந்தம் செய்வதில் இருக்கும் நன்மைகள் என்ன, எந்த அம்சங்களில் நாம் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் என்றும் விளக்குகிறார் Hallmark Buyers Agency எனும் நிறுவனத்தை நடத்திவரும் திலீப்குமார் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து வீடு விற்பனை அல்லது வாங்குதல் குறித்த நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Únete Ahora
- Acceso ilimitado a todo el contenido de la plataforma.
- Más de 30 mil títulos, incluidos audiolibros, podcasts, series y documentales.
- Narración de audiolibros por profesionales, incluidos actores, locutores e incluso los propios autores.