Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
25/04/2025 Duración: 08minஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற ஆறாம் ஆண்டு நிறைவு; நான்கு மாதங்களில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் 26 பேர் உயிரிழப்பு உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
Bankstown கொலை: போதைப்பொருள் கடத்தல்காரருடன் துணைவரின் தொடர்பு?
24/04/2025 Duración: 06minஇம்மாதம் 17ம் தேதி, வியாழக்கிழமை இரவு சிட்னியின் Bankstown பகுதியிலுள்ள வீடொன்றினுள் நுழைந்த சிலர் தாக்குதல் நடத்தி அங்கிருந்த பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக வாகனம் ஒன்றினுள் ஏற்றிச் சென்றனர். பின்னர் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் வாகனம் ஒன்று தீயூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. அதன் பின் இருக்கையில் அக் குறிப்பிட்ட பெண் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
சிட்னி முருகன் கோவில் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் எவை?
24/04/2025 Duración: 02minஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆளுந்தரப்பும் எதிர்க்கட்சிக் கூட்டணியும் பல தேர்தல் வாக்குறுதிகளை வழங்கிவருகின்றன. இதில் குறிப்பாக சிட்னி முருகன் கோவில் குறித்து வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி பற்றிய செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
‘ANZAC தினம்: சமாதானத்தை விரும்பி, போர் வீரரை நினைவு கூரும் நாள்'
24/04/2025 Duración: 10minஆஸ்திரேலிய நியூசிலாந்து இராணுவப் போராளிகளை வீரர்களை வாழ்த்தி வணங்கிக் கொண்டாடும், அவர்கள் வாழ்க்கையை நினைவு கூரும், அவர்கள் வீரச் செயல்களையும், எதிர்கொண்ட சவால்களையும், சந்தித்த தோல்விகளையும் பகிரும் நாள், அன்சாக் தினம். அன்சாக் தினத்தின் முக்கியத்துவம், அன்சாக் தினத்தை ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்துள்ள தமிழர்கள் ஏன் அவதானிக்க வேண்டும் என்ற கருத்துகளை, தமிழ் மற்றும் ஆஸ்திரேலிய சரித்திரம், இலக்கியம் என்பனவற்றில் ஆர்வம் கொண்டுள்ள திரு மைல்வாகனம் தனபாலசிங்கம் அவர்கள் அன்சாக் தினம் கொண்டாட ஆரம்பித்து நூறு வருடங்கள் பூர்த்தியான 2015ஆம் ஆண்டு, குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொண்டார். அதன் மறு ஒலிபரப்பு இது.
-
போப் பிரான்சிஸ் விட்டுச் செல்லும் தடங்களும், அடுத்த போப் தெரிவாகும் முறையும்
24/04/2025 Duración: 09minஉலகிலுள்ள சுமார் 140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் உயர்தலைவரான போப் பிரான்சிஸ் அவர்கள் திங்கள் (21 ஏப்ரல்) காலமானார். அவருக்கு வயது 88. முற்போக்கு சிந்தனை, உலக அமைதிக்கான முயற்சி, காலநிலை மாற்றம் தொடர்பான கருத்துக்கள் என்று போப் பிரான்சிஸ் மேற்கொண்ட முன்னெடுப்புகள், அவரை கிறிஸ்தவ சமயத்தையும் தாண்டி உலகின் பெரும் தலைவராக உருவாக்கியது. அவர் கத்தோலிக்க சமயத்தை எப்படி மறுமலர்ச்சிக்கும், சீர்திருத்ததிற்க்கும் வழி நடத்தினார், உலக அரங்கில் அவர் முன்னெடுத்த முயற்சிகள் என்ன, அடுத்த போப் எப்படி தெரிவு செய்யப்படுவார் என்று விளக்குகிறார் கத்தோலிக்க சமயத்தின் இறையியல் துறை அறிஞரும், போப் பிரான்சிஸ் குறித்த புத்தகங்களை எழுதியவருமான அருட்திரு.வெ.மரிய அல்போன்ஸ் அவர்கள்.
-
'வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் இரட்டை வருமானம் கொண்ட குடும்பங்களும் சிரமப்படுகின்றன' - OzHarvest
24/04/2025 Duración: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 24 ஏப்ரல் 2025 வியாழக்கிழமை வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.
-
Parent Migration Visa: எண்ணிக்கை குறைக்கப்படுமா? காத்திருப்பு ஆண்டுகள் குறைக்கப்படுமா? கட்சிகள் தரும் பதில்
23/04/2025 Duración: 06minபெற்றோர் நிரந்தரமாக ஆஸ்திரேலியாவில் வாழ வழங்கப்படும் விசாவுக்கான (Parent Migration Visa) சராசரி காத்திருப்பு நேரம் 31 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது; சில விண்ணப்பதாரர்கள் 50 ஆண்டுகள் வரை காத்திருக்கவேண்டியுள்ளது என்று கூறப்படுகிறது. பெற்றோர் விசா எனும் பிரச்சனை தேர்தலில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
-
Minister Bowen on Australia's energy prices, nuclear debate, and multicultural inclusion
23/04/2025 Duración: 07minIn this episode, RaySel from SBS Tamil speaks to Australia's Minister for Energy and Climate Change, Chris Bowen. He answers questions on rising energy prices, the U.S. shift on climate policies, community opposition to renewable projects, and the government's stance on nuclear energy.
-
எங்கள் வாக்கு இதை பொறுத்துதான் இருக்கும் – சில தமிழ் வாக்காளர்கள்
23/04/2025 Duración: 09minஆஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. பல நாடாளுமன்றத் தொகுதிகளைக்கொண்ட மேற்கு சிட்னி பகுதியை வெல்வதற்கு அனைத்து கட்சிகளுமே தீவிரமாக களம் கண்டுள்ளன. இந்த பின்னணியில், தமிழ் மக்கள் அதிகம் வாழும் மேற்கு சிட்னி பகுதியிலுள்ள சில தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றனர்? கருத்துக்களை முன்வைகின்றனர்: விஜி தயானந்தன், ஸ்ரீதரன் நடராஜா, பவானுஜா, ராஜன், ஷர்மிளா, கோகுலன், சுபேந்திரன், சுலோஜனா, கதிர்விழி குகசந்திரன் ஆகியோர். தொகுத்தவர்: றைசெல்.
-
சிட்னி, மெல்பனில் மீண்டும் Laughing கோ Laughing!
23/04/2025 Duración: 10minபுற்றுநோய் மருத்துவராகவும், மேடை நாடகம் மற்றும் திரைப்பட இயக்குனராகவும் நன்கு அறியப்படும் மருத்துவர் ஜெயமோகனின் தயாரிப்பில், laughing கோ laughing நாடகம், மீண்டும் சிட்னி, மெல்பனில் மேடையேறுகிறது. இது தொடர்பில் மருத்துவர் ஜெயமோகனுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் குறித்து கட்சிகளின் கொள்கைகள் எவை?
23/04/2025 Duración: 16minதேர்தல் காலங்களில் அகதி விவகாரம் அரசியல் ஆயுதமாகவும், பாகுபாடு கிளப்பும் கருவியாகவும் பயன்படுத்தப்படுவதாக சமூக அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன. அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் குறித்த ஒரு பார்வையை சமூக நிகழ்வுகளையும் அரசியல் களத்தையும் கூர்ந்து அவதானிப்பவரான மொஹமட் யூசூஃப் அவர்களின் கருத்துகளோடு முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்த வார தமிழகம்/இந்தியா: செய்திகளின் பின்னணி
23/04/2025 Duración: 07minதமிழக ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு; பாஜக கூட்டணி தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக-அதிமுக விவாதம்; சென்னையில் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாற்றுத்திறனாளிகள் கைது; ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது ஆயுததாரிகள் கொடூர தாக்குதல் உள்ளிட்ட செய்திகளுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
Who's Right? Who's Left? Where do you fall on the political spectrum? - SBS Examines : இடதுசாரி, வலதுசாரி என்றால் என்ன? அரசியல் சித்தாந்தம் அவர்களை எவ்வாறு வேறுபடுத்துகிறது?
23/04/2025 Duración: 07minFor years, the labels 'left' and 'right' have been used to describe where political parties sit. But are they still useful? - பல ஆண்டுகளாக, அரசியல் கட்சிகள் அவர்களின் சித்தாந்தங்களை பொருத்து வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த அரசியல் சித்தாந்தம் இன்னும் பயனுள்ளதா?
-
போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26ஆம் தேதி
22/04/2025 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 23/04/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
-
It's one of the most common forms of domestic violence. Why does it still go unrecognised and unreported? - SBS Examines : நிதி முறைகேடு ஏன் அங்கீகரிக்கப்படாமலும், முறைப்பாடு செய்யப்படாமலும் உள்ளது?
22/04/2025 Duración: 08minIn Australia, 90 per cent of women who have sought support for domestic violence have experienced financial abuse, and experts say migrant women are more at risk. - ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Rachael Knowles எழுதிய இந்த விவரணம் குடும்ப வன்முறையைப் பற்றி விவாதிக்கிறது. இதனை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
“பெரிய பட்ஜெட், ஹீரோ படங்களினால் நல்ல தமிழ் படங்கள் திரையிடப்பட முடியாத நிலை உள்ளது”
22/04/2025 Duración: 15minதிரைப்பட ஆய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர் என்ற பல அடையாளங்களின் வழியே அறியப்படும் நிழல் திருநாவுக்கரசு, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக “நிழல்” எனும் சினிமா இதழைதொடர்ந்து நடத்தி வருகிறார். சொல்லப்படாத சினிமா, திரையிசையில் தமிழிசை, நாகசுர சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி.என். இராஜரத்தினம்பிள்ளை வரலாறு, தமிழ் சினிமாவின் பரிமாணங்கள் என்று பல நூற்களையும் பதிப்பித்துள்ளார். தமிழ்நாடு எங்கும் பல குறும்படப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தியிருக்கிறார். அண்மையில் 2025ம் ஆண்டுக்கான எழுத்தாளர் மா.அரங்கநாதன் இலக்கிய விருதைப் பெற்ற நிழல் திருநாவுக்கரசு அவர்களை சந்தித்து உரையாடுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
போப் பிரான்சிஸின் மறைவிற்காக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் - பிரதமர்
22/04/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 22/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்: கிரீன்ஸ் கட்சித் தலைவர் Bandt
22/04/2025 Duración: 06min'ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்' தொடரில் கிரீன்ஸ் கட்சித் தலைவர் Bandt பற்றி அறிந்துகொள்வோம். முன்வைப்பவர் றேனுகா துரைசிங்கம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.
-
நாடாளுமன்றத் தேர்தல் 2025: புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
22/04/2025 Duración: 02minஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் The Australian நடத்தியுள்ள சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவு குறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மாற்றத்தின் முகம்: போப் பிரான்சிஸ் 1936-2025
21/04/2025 Duración: 07minரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் காலமானார். இதுகுறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.