Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 123:15:32
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • யுக்ரேன் ஒப்பந்தத்தை விரைவுபடுத்த விரும்பும் அமெரிக்க அதிபர்; வாஷிங்டனில் ஐரோப்பிய தலைவர்கள்

    18/08/2025 Duración: 03min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 18 ஜனவரி 2025 திங்கட்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    17/08/2025 Duración: 10min

    2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு - வாக்கு திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தியின் யாத்திரை தொடக்கம்; இந்திய அமலாக்கத்துறையின் தொடர் சோதனைகள் - நெருக்கடியில் திமுக?; சென்னை மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் பரபரப்புகளை ஏற்படுத்திய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • தெற்கு ஆஸ்திரேலியாவின் சிறந்த உணவகம் விருது வென்ற ‘சோழமண்டல உணவகம்'

    17/08/2025 Duración: 10min

    தென்கிழக்கு இந்தியாவின் கோரமண்டல் உணவு வகைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அடிலெய்ட் நகரின் முதல் உணவகம் என்று தம்மை அறிமுகப்படுத்தும் Logical Indian என்ற உணவகம், ‘2025 Restaurant & Catering Hostplus Awards for Excellence’ தெற்கு ஆஸ்திரேலியாவின் சிறந்த இந்திய உணவகத்திற்கு வழங்கும் விருதை வென்றுள்ளது. தமிழர் உணவுகளைப் பரிமாறும் ஒரு உணவகம் இந்த விருதை தெற்கு ஆஸ்திரேலியாவில் வென்றிருப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உணவகத்தின் உரிமையாளரும், சமையல் கலை நிபுணருமான மேர்வின் ஜோஷூவா அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • ஆஸ்திரேலியாவில் யாராகஇருந்தாலும் வேலையில் ஒருவருக்கு சிக்கல் எழுந்தால் என்ன செய்யலாம்?

    17/08/2025 Duración: 18min

    ஆஸ்திரேலியாவில் தொழிலாளிக்கு இருக்கின்ற உரிமைகள் என்ன, வேலைக்கான கூலியை வங்கி வழியாக வாங்காமல், நேரடியாக பணமாக பெற்றுகொள்ளலாமா, Fair Workயிடம் எப்படி புகார் தருவது என்று விளக்குகிறார் ஆஸ்திரேலிய Fair Work Ombudsman Anna Booth அவர்கள். அவரோடு உரையாடியவர் Sandya Veduri; தமிழில் றைசெல்.

  • ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு

    16/08/2025 Duración: 05min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (10 – 16 ஆகஸ்ட் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 16 ஆகஸ்ட் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.

  • A beginner’s guide to owning a pet in Australia - ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை!

    15/08/2025 Duración: 08min

    Bringing a pet into your home can fill it with joy and companionship – but it also comes with important responsibilities. In Australia, new pet owners need to be aware of legal requirements, along with essential tips for training and caring for their animals. - சட்டப்பூர்வ கடமைகள் முதல் அன்றாட பராமரிப்பு வரை, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு புதிய செல்லப்பிராணி உரிமையாளரும் தெரிந்து கொள்ள வேண்டியவை தொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • NBN - Amazon இணைந்து தொலைதூரப் பகுதிகளுக்கு உயர்-வேக இணைய சேவை

    15/08/2025 Duración: 06min

    நாட்டின் இணைய சேவையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு செய்தி, மற்றும் ஆஸ்திரேலியர்கள் விரைவான இணையத்தை பெற அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும் என NBN நிறுவனத்தின் தலைவர் கூறியிருப்பது போன்றவற்றின் செய்தியின் பின்னியினை எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். Government-owned NBN Co has partnered with Amazon to roll out high-speed broadband using 3,200 low Earth orbit (LEO) satellites from Amazon's Project Kuiper. NBN Co says 300,000 homes and businesses in regional, rural, and remote Australia will be able to access faster internet.

  • ‘$1 பில்லியனுக்கும் மேல் ஆஸ்திரேலியர்கள் ஒவ்வொரு ஆண்டும் சேமிக்க முடியும்’ - ஆஸ்திரேலிய வணிக கவுன்சில்

    15/08/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 15/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • ஆஸ்திரேலியாவின் சின்னமான அகுப்ரா தொப்பி உருவான கதை!

    15/08/2025 Duración: 10min

    ஆஸ்திரேலியாவின் பல்வேறு வாழ்க்கைப் பணிகளில் இருப்பவர்கள் பயன்படுத்தும் ஆஸ்திரேலியாவின் சின்னமான அகுப்ரா தொப்பி (Akubra hat), யின் வரலாறு, பயன்பாடு, தனித்தன்மை என்று பல தகவல்களை விவரிக்கிறார் உயிர்மெய்யார்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    14/08/2025 Duración: 08min

    இலங்கையில் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சி; மன்னார் மக்களின் நீண்ட நாட்கள் போராட்டங்களுக்குப் பின்னர் காற்றாலை மின்திட்டம் தற்காலிகமாக நிறுத்தம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு

    14/08/2025 Duración: 09min

    காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல்; டிரம்ப்- புடின் சந்திப்பு; ஈராக்கில் உள்ள குர்து அகதிகள் துருக்கிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு; சிரிய அரசு- சிரிய குர்து படை இடையே தொடரும் முறுகல் நிலை; இஸ்ரேல்-அமெரிக்கா உடனான போரின் போது 21 ஆயிரம் சந்தேக நபர்கள் கைது- ஈரான்; காங்கோ ஆயுதக்குழுவுக்கு தடைவிதித்த அமெரிக்கா; இந்தியா- சீனா இடையே சுமூகமாகும் உறவு; இந்தியா- பாகிஸ்தான் இடையிலான தண்ணீர் யுத்தம்; வாசிங்கடன் காவல்துறை கட்டுப்பாட்டை கையில் எடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • ஆஸ்திரேலியர்களின் விருப்பத்திற்குரிய மற்றும் மலிவான பல்பொருள் அங்காடி எது?

    14/08/2025 Duración: 02min

    ஆஸ்திரேலியர்களின் விருப்பத்திற்குரிய சூப்பர்மார்க்கெட்டாக Aldi மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Azaria Chamberlain, Uluru மலையடிவாரத்தில் காணாமல் போனது 17/08/1980

    14/08/2025 Duración: 03min

    1980ம் ஆண்டு ஆகஸ்து மாதம் 17ம் நாள் Azaria Chamberlain, Uluru மலையடிவாரத்தில் காணாமல் போனது குறித்த காலத்துளி நிகழ்ச்சி படைத்தவர், குலசேகரம் சஞ்சயன்.

  • ஆஸ்திரேலியாவில் பாலியல் துன்புறுத்தலுக்காக வழங்கப்பட்ட அதி கூடிய இழப்பீடு!

    14/08/2025 Duración: 09min

    பணியிட பாலியல் துன்புறுத்தல் விவகாரங்களில், ஃபெடரல் நீதிமன்றம் இந்த மாத தொடக்கத்தில், பாலியல் துன்புறுத்தல், பாதிக்கப்பட்டவர்களைப் பழிவாங்குதல் மற்றும் மோசமான சேதங்களுக்காக நேபாள பின்னணி கொண்ட Biplavi Jarga Magar என்பவருக்கு பாலியல் துன்புறுத்தலுக்காக ஆஸ்திரேலியாவில் வழங்கப்பட்ட அதி கூடிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • ‘போரை நிறுத்த Putin ஒப்புக் கொள்ளாவிட்டால் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும்’ – அமெரிக்க அதிபர்

    14/08/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 14/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • ஆஸ்துமா: எப்படி கட்டுப்படுத்துவது? எப்படி குணமாக்குவது?

    13/08/2025 Duración: 08min

    ஆஸ்துமா நோயை எப்படிக் கட்டுப்படுத்தலாம், குணமாக்கலாமென்று விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். முதலில் பதிவு செய்யப்பட்ட நாள்: 28 மே 2018.

  • புதிய இந்திய சமூக மையங்களை அமைக்க நிதியுதவி – விக்டோரியா அரசு அறிவிப்பு

    13/08/2025 Duración: 02min

    மெல்பனில் புதிய இந்திய சமூக மையங்களை அமைப்பதற்கு விக்டோரியா அரசு நிதியுதவி வழங்குகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • கீழடியின் பண்டைய வசீகரம்: மறுபிறவி எடுத்த களிமண் காதணிகள்

    13/08/2025 Duración: 13min

    களி மண்ணிலிருந்து கனவுகளை வடிவமைக்கிறார் நிதுஷா கிருஷன். எளிமையான மண்ணை அற்புதமான ஆபரண நகைகளாக மாற்றும் அவரது படைப்புகள் ஒவ்வொன்றும் பாரம்பரியம், படைப்பாற்றல் மற்றும் மீள் தன்மை ஆகியவற்றின் கலவையாகும். அவரது கைகள் ஆர்வம், பொறுமை மற்றும் அடிப்படையிலிருந்து அர்த்தமுள்ள ஒன்றை உருவாக்கும் அழகின் கதைகளைச் சொல்கின்றன. Kiki Collection என்ற நிறுவனத்தை உருவாக்கி, நிதுஷா கிருஷன் தனது படைப்புகளை உலகம் முழுவதும் சந்தைப்படுத்தி வருகிறார். போர்ச் சூழலில் இருந்து மீண்டெழுந்த ஒரு சமுதாயத்தின் அடையாளமாக இருக்கும் நிதுஷா கிருஷன் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • ஆஸ்திரேலிய பாலஸ்தீன அங்கீகாரத்தால் பயன் உண்டா? ஐ.நா அங்கீகாரம் கிடைக்குமா?

    13/08/2025 Duración: 12min

    பாலஸ்தீனத்தை பல மேற்கத்திய நாடுகள் தனி நாடாக அங்கீகரிக்கவிருக்கும் பின்னணியில், தாமும் அங்கீகரிப்போம் என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதால் என்ன பலன், பாலஸ்தீனத்திற்கு ஐ.நா அங்கீகாரம் கிடைக்குமா எனும் கேள்விகளுடன் அலசுகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் வெங்கடேசன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் – றைசெல்.

  • செய்யாத தவறுக்காக 20 ஆண்டுகள் சிறை அனுபவித்த சிட்னிப் பெண்ணும், இழப்பீடும்!

    13/08/2025 Duración: 07min

    தவறான தீர்ப்பினால் இருபது ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட Kathleen Folbigg என்ற தாய்க்கு NSW அரசு வழங்கும் நட்ட ஈடு போதாது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

página 7 de 49